சிந்துநதி முதல் குமரி ஈறாய் - என்றும்
சிந்தையில் பலநுற்றாண்டாய் நாம் ஒரே நாடு - எல்லைகளால்
மந்தையென பற்பல சிறு நாடுகள் அன்று
அசோகனின் பௌத்தமும், மௌரிய வாளும்
அவுரங்கசிபின் படைத்திறமும் , என்றும்
அமைத்ததில்லை ஒரே எல்லைக்கோடு
தொழில்புரட்சி ஓங்கிட, காலம் கனிந்திட
தைத்தான் வாளால் ஒரே நாடு - ஆங்கிலேயன்
தந்தான் கூடவே தரித்திரமும் , பஞ்சமும்
மனிதனை மன்னனாக்கினால் - வரலாறுபடி
சுயம் பெரிதுபடும் ; சமூகம்
மரித்துப் போகும் என அறிந்ததனால் ....
ஆயிரம் ஆண்டுகளாய் நீடித்த
சோதனை காலங்கள் முடிவுற
ஆன்றோர் கூடினர் சுதந்திரத்தின் பின்னர் !
அறிவித்தனர் இந்நாளில் - இந்தியாவிற்கு
என்றென்றும் ஒரு அரசன் -இந்த
அகிலம் வாழும்வரை நீடித்திடவே !
காலமாற்றத்தின் சுழற்சியில் - என்றும்
மாறாது அவனது கரு
மாறுவது வெறும் மனபிம்பங்களே !
அறுபது ஆண்டுகள் வெற்றிகரமாய்
ஆண்ட அரசன் - நமது அரசியல் சாசனம்
காலந்தோறும் புதுச்சிகரங்கள் தொட்டிட
அரசால் சுட்டப்பட்ட இளவல்கள் நாம் !
ஆண்டியும் அரசனும் சமமாய் உயர்வு
எய்திடும் மாற்றத்தின் துருப்புகள் நாம் !
நாம் ....
பல்துறை தேவைகள் அறிந்திடுவோம்
புதுகலைகள் பல கற்றிடுவோம்
பழையன நீக்கி சீர் செய்திடுவோம்
பாரினில் இந்தியாவை உயர்த்திடுவோம் !!!
A tamil poem written by me , and was read on Republic Day celebrations in NACEN , Mumbai
English translation :
We Indians from sind to Kanyakumari - were
United as a nation for centuries by thought - though
divided by many physical boundaries
Neither Asoka's buddhism
nor Maurya's sword - not even
aurangazeb's mighty army
broke the barriers completely
As time ripened,with industrial revolution
The british stitched together as A Nation by might
but never failed to offer deadly famines & poverty
going by history, when a man assumes soverignity
His self grows ! Dies thy society !
Only his self grows ! dies thy society !
our forefathers assembled after
independence,To end the sins of
divisiveness since centuries.
Announced on this day - an unchallenged
King of our India , who will
rule us till this world exists
With the wheels of change - his
views will change - not his
Core principles
Since sixty years, we were ruled
by his majesty - our constitution,
to reach its new heights
The country has destined us,Young Civil servants
As facilitators of change to
bridge all the existing inequalities
We ..
shall explore new vistas !
Enrich ourselves with newests ; Act
Efficiently to curb out redundancies - and
Empower India as the best
jai hind!!!